ஜிஎஸ்டி விளம்பரத்திற்கு மத்திய அரசு ரூ. 132 கோடி செலவு
ஜிஎஸ்டி விளம்பரத்திற்கு மத்திய அரசு ரூ. 132 கோடியை செலவு செய்துள்ளது என ஆர்.டி.ஐ.யில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த முடிவு செய்த மத்திய அரசு, அதற்காக நடவடிக்கையை மேற்கொண்டது. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஜிஎஸ்டி குறித்த விளம்பரங்களும், விழிப்புணர்வு பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டது.,
இப்போது இவ்வாறு ஜிஎஸ்டியை விளம்பரப்படுத்த மத்திய அரசு ரூ.132.38 கோடி செலவு செய்துள்ளது என்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது. ஜிஎஸ்டி விளம்பரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 தேதியிடப்பட்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சக பதிலில், பிரிண்ட் ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட விளம்பரத்திற்கு அரசுக்கு ரூ.1,26,93,97,121 (சுமார் ரூ.127 கோடி) செலவாகியுள்ளது.
மின்னணு ஊடகங்களுக்காக செலவு கிடையாது. மற்றவகை ஊடகங்களில் விளம்பரப்படுத்த ரூ. 5,44,35,502 (சுமார் ரூ.5 கோடி) செலவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story