நாய் குரைப்பதால் தூங்க முடியவில்லை: மருத்துவமனையில் மாற்ற லாலு பிரசாத் கோரிக்கை


நாய் குரைப்பதால் தூங்க முடியவில்லை: மருத்துவமனையில் மாற்ற லாலு பிரசாத் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sep 2018 7:52 AM GMT (Updated: 4 Sep 2018 7:52 AM GMT)

இரவு முழுவதும் நாய் குரைப்பதால் தான் தூங்க முடியவில்லை. எனவே மருத்துவமனையை மாற்றுமாறு லாலு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். #LaluPrasad

ராஞ்சி,

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் லாலு பிரசாத் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் நெஞ்சு வலி மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை பிரச்சனையால் கடந்த சில வாரங்களாக மும்பை ஆசியன் இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத், கடந்த 25-ந் தேதி சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பினார். இதனிடையே ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் என்றழைக்கப்படும் ராஜேந்திர மருத்துமனை நிறுவனத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட லாலு, சிறை அதிகாரிகளின் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் இரவு முழுவதும் நாய் குரைப்பதால் தான் தூங்க முடியவில்லை. மேலும் கொசுக்களும் கடிக்கின்றன. எனவே மருத்துவமனையை மாற்றக்கோரி சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, ரிம்ஸ் மருத்துவனை இயக்குனர் ஆர் கே ஸ்ரீவஷ்தாவ் கூறுகையில்,

இரவு முழுவதும் நாய் குரைப்பதால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், தன்னை நவீன வசதிகள் கொண்ட சிறப்பு வார்டுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள நாய்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம் எனக் கூறினார். 

70 வயதாகும் லாலு பிரசாத், நான்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வருகிறார்.


Next Story