யாரையும் குறைசொல்லவில்லை: கேரள நடிகர்கள் நன்கொடை குறித்து அமைச்சர் விளக்கம்
யாரையும் குறைசொல்லவில்லை கேரள நடிகர்கள் நன்கொடை குறித்து கேரளா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் விளக்கம் அளித்து உள்ளார்.
திருவனந்தபுரம்
கேரளா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் சமீபத்தில் கேரள மழை வெள்ள பாதிப்புக்கு மலையாள நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்கவில்லை என்று தெரிவித்தார். மலையாள நடிகர்களை விட மிகப்பெரிய தொகையை ஆந்திராவைச் சேர்ந்த நடிகர்கள் அளித்து உள்ளனர் என கூறினார். ஆனால் அவர் ராகவா லாரன்ஸுக்கு பதில் நடிகர் பிரபாசை வைத்து கூறி உள்ளார்.
இப்போது, அமைச்சர் தனது பேஸ்புக் பதிவில் அதுகுறித்து விரிவாக எழுதியுள்ளார், அவருடைய கருத்துக்களை தெளிவுபடுத்தி உள்ளார்.
தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தார். என் பேச்சில் நான் உண்மையில் ராகவா லாரன்ஸ் பற்றி குறிப்பிட்டேன்.என் கவனிப்பு யாரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. ராகவா லாரன்ஸ், கேரளாவுக்கு வெள்ளம் வந்தபோது எங்களுக்கு ஆறுதல் கூறினார். நடிகர் பிரபாஸ் முதல் அமைச்சர் நிவாரணநிதிக்கு ரூ .25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
அமைச்சர் தனது அறிக்கையில் ஒரு சர்ச்சைக்கு அவர் விரும்பவில்லை என்று கூறி உள்ளார். நடிகரின் நல்லெண்ணத்தை புகழ வேண்டும். கேரளாவுக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றியுடன் இருக்கிறேன். என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story