கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு யோசனை
கட்சியை விட்டு விலகினால் எம்.பி., எம்.எல்.ஏ. பதவியை துறக்க வேண்டும் என்ற வகையில் கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் வெங்கையா நாயுடு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ளார். மாநிலங்களவையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதுதான் எனது முன்னுரிமை பணியாகும் என கூறியுள்ளார். தவறு செய்யும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
மாநிலங்களவை விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கான குழு, தனது முதல்கட்ட அறிக்கையை என்னிடம் தந்துள்ளது.
இறுதி அறிக்கை, அடுத்த மாத இறுதியில் கிடைக்கும். கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில், அதில் கடுமையான உட்பிரிவுகளை சேர்க்க வேண்டும். கட்சியை விட்டு விலகுபவர், தனது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை தானாகவே துறந்துவிடும் வகையில், விதிமுறைகளை சேர்க்க வேண்டும். இது, ஒரு தார்மீக பொறுப்பு. ஆனால், சிலர் இதை செய்வார்கள், சிலர் செய்ய மாட்டார்கள். ஆகவே, இதை அரசியல் சட்ட கடமையாக ஆக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story