தேசிய செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு + "||" + Rupee Hits New All-Time Low Of 71.79 Against US Dollar. Key Things To Know

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை,

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்றைய வர்த்த நேர முடிவில் ரூ. 71.58 காசுகளாக   வீழ்ச்சி அடைந்தது இருந்தது.

சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 6-வது நாளாகச் சரிந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.71.79 ஆக வர்த்தகம் ஆகிறது. 

அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41, டீசல் விலை ரூ.75.39. காசுகளாக அதிகரித்தது.