குடும்ப பிரச்சனையால் கான்பூர் எஸ்.பி தற்கொலை முயற்சி
குடும்ப பிரச்சனையால் கான்பூர் எஸ்.பி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கான்பூர்,
கான்பூர் மாவட்ட எஸ்.பி ஆக சுரேந்திர குமார் தாஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கான்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 4 மணிக்கு தகவல் கிடைத்தது. சுரேந்திர குமார் தாஸ் திடீரென உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து அவரை மீட்டு கான்பூர் மருத்துவமனையில் சேர்த்தோம் என்று எஸ்.எஸ்.பி சஞ்சீவ் சுமன் தெரிவித்துள்ளார். மேலும் சுரேந்திர குமார் தாஸ் கடந்த சில நாட்களாகவே குடும்ப பிரச்சனையில் சிக்கிதவித்து வருவதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேந்திர குமார் தாஸ் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். லக்னோவில் வசித்து வரும் அவர் சமீபத்தில் கான்பூர் எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story