பெண்கள் அதிகாரம், விவசாயிகளின் பிரச்சினை வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்


பெண்கள் அதிகாரம், விவசாயிகளின் பிரச்சினை வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்
x
தினத்தந்தி 5 Sept 2018 4:59 PM IST (Updated: 5 Sept 2018 4:59 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் அதிகாரம், விவசாயிகளின் பிரச்சினை ஆகியவை வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என ஐபிஏசி ஆய்வில் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கி விட்டன.

பாரதிய ஜனதாவும், காங்கிரசும் தேர்தல் வியூகம் அமைப்பதில் மும்முரம் காட்ட தொடங்கி உள்ளன. பா.ஜனதாவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.

இதற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஐ.பி.ஏ.சி. என்ற இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்ற  தனியார் நிறுவனம்  மற்றும் தேசிய செயற்பட்டியல் மன்றம்  ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு  நடத்தி உள்ளது.  57 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு அதிகாரம் மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாத்தல்  ஆகியவை இந்தியாவில் அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகளாக அமையும் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

 2019 பாராளுமன்ற தேர்தலில் முக்கியமாக 10  சமூக பிரச்சினைகள் முன் வைக்கப்பட்டு உள்ளன.சுகாதார உணவு, சுத்தாமான காற்று - நீர், 
வகுப்புவாத ஒற்றுமை, பிராந்திய மொழிகளின் ஊக்குவிப்பு  ஆகியவை  பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  பிரச்சினைகளில் சில,  2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று 48 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3 சதவீதம் பேரும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 சதவீதம் பேரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 4.2 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 3.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேசிய செயற்பட்டியல் மன்ற கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் 10 பிரபலமான அரசியல் அல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். 

நடிகர் அமிர்கான், அக்ஷய் குமார், அன்னா ஹசாரே, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி, எம்.எஸ் தோனி, தொழிலதிபர் ரத்தன் டாடா, பத்திரிகையாளர் ரவிஸ் குமார், பொருளாதார நிபுணர்  மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும்  சர்ச்சைக்குரிய யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் ஆகியோர் கணிப்பின் போது பதிலளித்தவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.

Next Story