விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி


விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி
x
தினத்தந்தி 5 Sept 2018 6:57 PM IST (Updated: 5 Sept 2018 6:57 PM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது.

புதுடெல்லி,
  
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.   விளை பொருட்களுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை. தேசிய வேளாண்மை ஆணையத்தின் பரிந்துரை விலையை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி, குறைந்தபட்சக் கூலியை உயர்த்துதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்தது. 

இந்தநிலையில்,  விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி சென்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அகில இந்திய கிஷான் சபா, அகில இந்திய வேளாண் தொழிலாளர் யூனியன், மஸ்துர் கிஸான் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பாக இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பேரணி நடைபெற்ற பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.  சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Next Story