தேசப்பற்று கோஷங்களை எழுப்பிய மாணவர்களுக்கு எதிர்ப்பு; காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்


தேசப்பற்று கோஷங்களை எழுப்பிய மாணவர்களுக்கு எதிர்ப்பு; காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்
x
தினத்தந்தி 1 Oct 2018 6:33 AM IST (Updated: 1 Oct 2018 6:33 AM IST)
t-max-icont-min-icon

தேசப்பற்று கோஷங்களை எழுப்பிய மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

மாண்ட்சோர்,

மத்திய பிரதேசத்தில் மாண்ட்சோர் நகரில் அரசு வணிக கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் குப்தா.

இவர் வகுப்பறையில் இருந்தபொழுது மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த விடாமல் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் அமைப்பினை சேர்ந்த சில மாணவர்கள் பாரத் மாதா கி ஜெய் என கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இதனால் வகுப்பறையை விட்டு வெளியே வந்த பேராசிரியர் இடையூறு செய்ய வேண்டாம் என அவர்களை கேட்டு கொண்டார்.  ஆனால் தேசப்பற்று கோஷங்களை எழுப்ப விடாமல் தடுக்க முயற்சித்ததற்காக காவல் துறையிடம் புகார் செய்வோம் என அந்த மாணவர்கள் பேராசிரியரை அச்சுறுத்தி உள்ளனர்.

அவர்களின் இந்த மிரட்டலால் பயந்துபோன பேராசிரியர் மாணவர்களின் கால்களை தொட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.  இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story