ஜம்முவில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 இளைஞர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்


ஜம்முவில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 இளைஞர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:13 AM IST (Updated: 1 Oct 2018 10:13 AM IST)
t-max-icont-min-icon

ஜம்முவில் சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் சாலையில் நேற்றிரவு பட்டாரா-கனாசக் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதில் 20 முதல் 25 வயதுடைய 5 இளைஞர்கள் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சரக்கு வாகனம் ஒன்றின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.  இதில் ராணா பிரதாப் சிங் (வயது 22), தர்வீந்தர் சிங் (வயது 22) மற்றும் புபீந்தர் சிங் (வயது 20) ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.  4வது நபர் யாரென தெரியவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த குமார் (வயது 25) என்பவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Next Story