மோடியின் இந்தியாவில் பணக்காரர்களின் ரூ.3.16 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி ராகுல்காந்தி தாக்கு
மோடியின் இந்தியாவில் சாதாரண மக்களின் ரூ.3.16 லட்சம் கோடியை பயன்படுத்தி பெரும் பணக்காரர்களின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
ரிசர்வ் வங்கியின் தகவல்களை கொண்டு வெளியான செய்தியை குறிப்பிட்டு பிரதமர் மோடியின் அரசின் மீது புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். கடந்த 2014 ஏப்ரல் முதல் 2018 ஏப்ரல் வரையில் 4 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.3.16 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்து உள்ளன. ஆனால் வங்கிகள் வசூலித்த கடன் தொகையான ரூ.44,900 கோடியை விட இது 7 மடங்கு அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை குறிப்பிட்டு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடியின் இந்தியா, சாதாரண மக்கள் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டும், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் ஆதாருக்குள் இருக்கும். ஆனால் உங்களால் பணத்தை பயன்படுத்த முடியாது என்பதாக இருந்தது. அதேநேரம் பெரும் பணக்காரர்களுக்கான மோடியின் இந்தியா, அவர்களுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்வதற்கு உதவியாக இருந்தது.
சாதாரண மக்களின் ரூ.3.16 லட்சம் கோடியை பயன்படுத்தி பெரும் பணக்காரர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.
Related Tags :
Next Story