தீபாவளி பரிசாக ரெயில் கட்டணம் குறைப்பு ரெயில்வேதுறை அறிவிப்பு


தீபாவளி பரிசாக  ரெயில் கட்டணம் குறைப்பு  ரெயில்வேதுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 10:57 AM IST (Updated: 1 Nov 2018 10:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை - மதுரை துராந்தோ ரெயில் உட்பட பல ரயில்களில் தற்போது அமலில் உள்ள பிளக்ஸி பேர் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி

 ரெயில்வேத்துறை, 2016-ம் ஆண்டு முக்கியமான  ரெயில்களில் ‘பிளக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. ராஜதானி , துரந்தோ, சதாப்தி ரயில்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த ரெயில்களில் ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன், அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதுபோன்று, 50 சதவீதம் வரை கட்டணம் உயர்வு இருக்கும். முதல் வகுப்பு ஏசி உள்ளிட்ட சில வகுப்புகளுக்கு இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், பிளக்ஸி பேர் கட்டணத்தை குறைத்து  ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 15 பிரீமியம்  ரெயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 32  ரெயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சிறப்பு கட்டணம் ரத்து செய்து  ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி 101  ரெயில்களில் சிறப்பு கட்டணம், அடிப்படை கட்டணத்தில் 1.5 சதவீதத்துக்கு பதிலாக 1.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், படுக்கைகள் 50 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பும் 15  ரெயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பயணிகள் பயன் பெறும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



Next Story