2019 ம் தேர்தல் வெற்றிக்கு பாரதீய ஜனதாவுக்கு கடவுள் ராமர் உதவி செய்யப்போவது இல்லை பரூக் அப்துல்லா தாக்கு


2019 ம் தேர்தல் வெற்றிக்கு பாரதீய ஜனதாவுக்கு கடவுள் ராமர் உதவி செய்யப்போவது  இல்லை பரூக்  அப்துல்லா தாக்கு
x
தினத்தந்தி 1 Nov 2018 1:06 PM IST (Updated: 1 Nov 2018 1:06 PM IST)
t-max-icont-min-icon

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பாரதீய ஜனதா கட்சியை தாக்கி பேசி உள்ளார். அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோவில் பிரச்சினைக்காக கடவுள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க போவதில்லை என கூறி உள்ளார்.

புதுடெல்லி:

கடந்த வாரம்  சுப்ரீம் கோர்ட் ஜனவரி 2019 வரை ராம-ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கை  ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ்  உள்பட பல எதிர்க்கட்சிகள்  வரவிருக்கும் 2019 தேர்தல்களில்   ராம-ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்சினையை  மையபடுத்தப்போவதாக  பிஜேபி  மீது  குற்றம் சாட்டினர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) உடன் கூட்டணி முறிவு ஏற்பட்ட பின்னர் பா.ஜ.கவின் நகர்வுகள் பற்றி அப்துல்லா பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பாரதீய ஜனதா கட்சியை தாக்கி பேசி உள்ளார். அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோவில்  பிரச்சினையில்  கடவுள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க போவதில்லை என கூறி உள்ளார்.

2019 தேர்தலில் ராமர்  வெற்றி பெறச்செய்வார் என்று அவர்கள் (பிஜேபி) நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற கடவுள் உதவி செய்யப்போவது இல்லை. மக்கள் தான் ஓட்டளிக்கவேண்டும்.  அதற்கு பதில் கடவுள் ராமரோ அல்லாவோ ஓட்டளிக்கமாட்டார்கள்.  என அவர் கூறி உள்ளார்.

Next Story