டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமையில் ஆலோசனை


டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு:  மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமையில் ஆலோசனை
x
தினத்தந்தி 1 Nov 2018 2:03 PM IST (Updated: 1 Nov 2018 2:03 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (காற்று தர சுட்டெண்) அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம்.

இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 மிக மிக மோசமானது என்று பொருள்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன் தினம் பகல் 3 மணிக்கு இந்த அளவீடு 401 என்ற அளவை எட்டியது. சமீப காலத்தில் இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என தகவல்கள் கூறுகின்றன. 

இதன் காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என கூறி அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் வெளியே செல்கிறபோது ‘என்-95’ முகமூடிகளை (மாஸ்க்) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமையில் டெல்லியில் மாசு அதிகரிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி சுற்றுசூழல் துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனையில் டெல்லியில் காற்று மாசு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story