நலதிட்ட உதவிகளை மேடையில் இருந்தே தூக்கி எறிந்த காங்கிரஸ் மந்திரி மக்கள் அதிர்ச்சி
கர்நாடகாவில் வருவாய்துறை மந்திரி தேஷ்பாண்டே நலத்திட்ட உதவி பொருட்களை வழங்கும் போது மேடையில் இருந்தே தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் ஹலியல் என்ற கிராமத்தில் அரசு சார்பில் கட்டபட்டுள்ள விளையாட்டு மைதானத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அம்மாநில வருவாய் துறை மந்திரி தேஷ்பாண்டே திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு, பல்வேறு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது வேறு நிகழ்ச்சிக்கு அவசரமாக செல்ல இருந்த காரத்தினால், மந்திரி வீரர்களை மேடைக்கு வரவழைத்து நலத்திட்டப் பொருட்களை வழங்காமல், மேடையில் இருந்தே அவர்களை நோக்கி தூக்கி எறிந்தார்.
கர்நாடக காங்கிரஸ் அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Related Tags :
Next Story