பாகிஸ்தானுடனான பேருந்து போக்குவரத்து; காஷ்மீர் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது: சீனா
பாகிஸ்தான் இடையேயான பேருந்து போக்குவரத்தினால் காஷ்மீர் பற்றிய எங்களது கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே பேருந்து போக்குவரத்து நடைபெறுவதற்கு முடிவாகி உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது இந்திய இறையாண்மை மற்றும் எல்லைப்புற ஒற்றுமையை மீறும் செயல் என இந்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ கேங் கூறும்பொழுது, காஷ்மீர் விவகாரத்தில் சீனா தெளிவாக உள்ளது. இதனை பலமுறை நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம்.
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேருந்து போக்குவரத்தினால் எல்லைப்புற விவகாரத்தில் ஒன்றும் ஏற்பட போவது இல்லை என்று கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை வழியே காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
Related Tags :
Next Story