2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை மன்னிக்காதீர்கள் விவசாயிடையே யஷ்வந்த் சின்கா பேச்சு


2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை மன்னிக்காதீர்கள் விவசாயிடையே யஷ்வந்த் சின்கா பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2018 3:59 PM IST (Updated: 1 Nov 2018 3:59 PM IST)
t-max-icont-min-icon

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை மன்னிக்காதீர்கள் என விவசாயிடையே முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா பேசி உள்ளார்.


ஜூனாகத்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் மன்னிக்க கூடாது என்று முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் வந்தலி என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

இந்த அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்தது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் அல்லது தலித்துகள் எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். புதிய கோஷங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அடுத்த (லோக் சபா) தேர்தல் தான் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய ஒரே வழி .

2014-ல் (பொது) தேர்தல்களுக்கு முன்னரே வாக்குறுதிகளை அளித்தபோது பி.ஜே.பி.யில் ஒரு அங்கமாக  இருந்ததால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்.என கூறினார்

ஆனால், அடுத்த தேர்தல்களில் அவரை (மோடி) நீங்கள் மன்னிக்க விரும்பவில்லை. என கூறினார்.விவசாயிகளிடம் உரையாற்றுவதற்கு படேல் இன தலைவர் ஹர்திக் படேல் சின்காவை அழைத்து இருந்தார்.பிஜேபி எம்.பியான சத்ருகான் சின்காவும் இதில் கலந்து கொண்டார்.

நர்மதா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் 182 மீட்டர் சிலை திறப்பு விழாவில் நேற்று முன்தினம் பேசிய, மோடி ஒரு சார்பு விவசாயி திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என சின்கா கூறினார்.விவசாயிகளுக்கு எந்தவொரு திட்டத்தையும் அவர் அறிவிக்கவில்லை, ஏனெனில் அவர்களை மறந்துவிட்டார் என கூறினார்.

Next Story