பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதல் நோக்கம் ராகுல் காந்தியை சந்தித்த பின் சந்திரபாபு நாயுடு பேட்டி
பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதல் நோக்கம் என்று ராகுல்காந்தியை சந்தித்த பின் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வீட்டிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அவரை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது
- ராகுல் காந்தியை சந்தித்த பின் சந்திரபாபு நாயுடு செய்தியார்களிடம் கூறியதாவது:
பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதல் நோக்கம்; அதற்கான சந்திப்புதான் நடைபெற்றது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இணைத்து, பொதுவான தளத்தை உருவாக்க இருக்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறோம் எங்களுடன் இணையுமாறு ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளேன்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
Related Tags :
Next Story