நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு - ராகுல்காந்தி


நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 1 Nov 2018 6:26 PM IST (Updated: 1 Nov 2018 6:35 PM IST)
t-max-icont-min-icon

நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். இருவரும் தெலுங்கானாவில் காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைப்பது பற்றி பேசினர். பின்னர் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு கூட்டாக பேட்டி அளித்தனர். 

டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் சந்திரபாபுவின் சந்திப்பிற்கு பின் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு சோதனையான காலகட்டத்தில் உள்ளது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்தது சந்தேகமே இல்லை.  எங்கள் முயற்ச்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story