தேர்தல்கள் வரும்போதுதான் பா.ஜனதாவிற்கு ராமர் கோவில் நினைவிற்கு வரும் காங்கிரஸ் விமர்சனம்


தேர்தல்கள் வரும்போதுதான் பா.ஜனதாவிற்கு ராமர் கோவில் நினைவிற்கு வரும் காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 1 Nov 2018 6:34 PM IST (Updated: 1 Nov 2018 6:34 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல்கள் வரும்போதுதான் பா.ஜனதாவிற்கு ராமர் கோவில் நினைவிற்கு வரும் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.


ஜெய்பூர்,


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் ராமர் கோவில் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “தேர்தல்கள் வரும்போதுதான் பா.ஜனதாவிற்கு ராமர் கோவில் நினைவிற்கு வரும். அவர்கள் கடவுள் ராமருக்கு எதுவும் செய்தது கிடையாது. ராமர் மீது அவர்களுக்கு நம்பிக்கையெல்லாம் கிடையாது, ஆனால் அவருடைய பெயரில் வாக்குகளை மட்டும் பெறுகிறகிறது,” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்த ராஜீவ் சுக்லா, ஒப்பந்தம் விவகாரத்தில் தகவலை மத்திய அரசு பாராளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மறைக்கிறது என சாடியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு கேட்கிறாது, அவர்கள் என்ன விதமான ஊழல் இல்லாத இந்தியாவை கொடுத்துள்ளார்கள்? தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் பாராளுமன்றத்தில் இருந்து அரசு மறைக்கிறது என கூறியுள்ளார். 


Next Story