குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் மோதிய மத்திய மந்திரி
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் விளையாட்டாக சண்டையிட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி இந்திராகாந்தி மைதானத்தை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் விளையாட்டு தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து விளையாட்டாக குத்துச்சண்டையில் மேரிகோமுடன் ஈடுபட்டார்.
மந்திரியின் குத்துகளை லாவகமாக தவிர்த்த மேரி கோம், குத்துச்சண்டையில் எப்படி ஈடுபடுவது குறித்து மந்திரிக்கு விளக்கமும் அளித்தார். ஆனாலும் கடைசி வரை மேரி கோம் முன் ராஜ்யவர்தன் சிங் தாக்கு பிடிக்க முடியவில்லை.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story