5 மாநில சட்டசபை தேர்தல்: போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை வெளியிட்டது - பாஜக


5 மாநில சட்டசபை தேர்தல்:  போட்டியிடும் வேட்பாளர்கள் முதல்  பட்டியலை வெளியிட்டது - பாஜக
x
தினத்தந்தி 2 Nov 2018 9:57 AM GMT (Updated: 2 Nov 2018 9:57 AM GMT)

5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 12–ந்தேதி முதல் டிசம்பர் 7–ந்தேதி வரை நடைபெற உள்ளது.  5 மாநில சட்டசபை தொகுதிகளிலும் டிசம்பர் 11–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. 

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க. வெற்றி பெற்று 4–வது முறையாக ஆட்சியை தக்க வைக்கமுடியுமா? என்ற கேள்விக்கு விடைகாணும் வகையில் தேர்தலை சந்திக்க இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் எப்போதும் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. 

இந்தநிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 177 வேட்பாளர்கள், மிசோரம் மாநிலத்தில் 24 வேட்பாளர்களையும், தெலுங்கானாவில் 28 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் போட்டியிடும் 177 வேட்பாளர்கள் பட்டியலில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story