சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது
சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது
புதுடெல்லி,
மத்திய பிரதேசம், குஜராத், பாட்னா, திரிபுரா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சட்ட அமைச்சகம், அதன் ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. கொலிஜியத்தின் இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு நேற்று முன்தினம் அதற்கான ஒப்புதலை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து 4 நீதிபதிகளும் காலை 10.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். சுப்ரீம் கோர்ட்டில் நடந்த இந்த எளிய நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள், வக்கீல்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த 4 பேரையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆகும்.
Related Tags :
Next Story