எம்.ஜே.அக்பர் மீது அமெரிக்க பெண் பத்திரிகையாளர் பலாத்கார புகார், அவருடைய மனைவி நிராகரிப்பு
மத்திய மந்திரி சபையில் இருந்து சமீபத்தில் பதவி விலகிய எம்.ஜே.அக்பர் மீது அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருந்த எம்.ஜே.அக்பர் (வயது 67) அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகை துறையில் பணியாற்றிய போது சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் புகார் கூறினர். ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளியான இந்த புகார்களை தொடர்ந்து கடந்த மாதம் அவர் பதவி விலகினார். மேலும் தனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய பெண் பத்திரிகையாளர்கள் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், 1994-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் எம்ஜே அக்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். அக்பரால் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டேன் என்பதை விளக்கியுள்ளார். ஜெய்பூர் ஓட்டலில் உடல் ரீதியாக பலம்வாய்ந்த அக்பர் என்னை பலாத்காரம் செய்தார், அவமானமாக உணர்ந்த என்னால் காவல் துறையில் புகாரளிக்க முடியவில்லை. அப்போது இதுதொடர்பாக யாரிடமும் பேசவில்லை என்றும் பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியிருந்தார்.
இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எம்ஜே அக்பர், “இருவர் சம்மதத்துடன்தான் பாலியல் உறவு மேற்கொண்டோம்,” என்று கூறியுள்ளார்.
1994களில் குற்றம் சாட்டிய பத்திரிக்கையாளரும், நானும் சம்மதத்துடனான உறவை தொடங்கினோம், பல மாதங்களாக தொடர்ந்தது. இந்த உறவுமுறை குறித்தான பேச்சு எழுந்துள்ளது, என்னுடைய சொந்த வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த சம்மதத்துடனான உறவு முடிந்துவிட்டது, ஒருவேளை நல்ல முறையில் முறிந்திருக்காது என்று கூறியுள்ளார் எம்ஜே அக்பர். இதைப்போல எம்.ஜே.அக்பரின் மனைவி மல்லிகாவும் கணவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன் பல்லவியால் தங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியின்மையும், சச்சரவும் ஏற்பட்டதாக கூறியுள்ள மல்லிகா, பத்திரிக்கையாளர்–அக்பர் இடையே அப்போது நடந்த நள்ளிரவு போன் உரையாடல்கள் மூலம் அவர்களுடைய நெருக்கத்தை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story