ராமர் கோவில் விவகாரம் நீங்கள் மோடி அரசை கவிழ்க்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சிவசேனா கேள்வி


ராமர் கோவில் விவகாரம் நீங்கள் மோடி அரசை கவிழ்க்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 2 Nov 2018 9:21 PM IST (Updated: 2 Nov 2018 9:21 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நீங்கள் மோடி அரசை கவிழ்க்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சிவசேனா கேள்வியை எழுப்பியுள்ளது.


மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சிவசேனாவும் பா.ஜனதாவிற்கு கேள்விகளை எழுப்பி வருகிறது. ராமர் கோவில் வாக்குறுதி பொய்யானால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 2 இடங்கள் தான் கிடைக்கும் பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் “தேவைப்பட்டால் மிகப்பெரிய போராட்டம்” என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் பேசுகையில், மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ராமர் கோவில் விவகாரம் ஒதுக்கப்பட்டது. கோவில் கட்டும் விவகாரத்தை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்போது இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தேவையென ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உணர்கிறது. மத்தியில் வலுவான அரசை வைத்துக்கொண்டு  போராட்டம் தேவையென்று நீங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) உணர்ந்தால், ஏன் அரசை கவிழ்க்கவில்லை? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரமான பணி காரணமாகவே பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்தது, ஆனால் ராமர் கோவில் உள்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றும் சிவசேனா கூறியுள்ளது.

Next Story