காங்கிரஸ் ஆட்சியில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 %, பா.ஜ.க. ஆட்சியில் 7.3 %; சுஷ்மா சுவராஜ்


காங்கிரஸ் ஆட்சியில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 %, பா.ஜ.க. ஆட்சியில் 7.3 %; சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:40 AM GMT (Updated: 1 Dec 2018 11:40 AM GMT)

காங்கிரஸ் ஆட்சியில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதம் ஆக இருந்தது என்றும், பா.ஜ.க. ஆட்சியில் 7.3 சதவீதம் ஆக உள்ளது என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கூறம்பொழுது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பலவீன நிலையில் 5வது இடத்தில் இருந்தது என சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டும் பட்டியலிட்டு இருந்தது.  பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ள பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்று இருந்தது என முன்னாள் நிதி மந்திரி சிதம்பரத்திற்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இன்று இந்த இரு அமைப்புகளும் இந்தியாவை பொருளாதாரத்தில் வேகமுடன் வளர்ந்து வரும் நாடு என கூறி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கடந்த 10 வருட ஆட்சியில் இந்தியாவின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 6.7 சதவீதம் ஆக இருந்தது.  கடந்த பா.ஜ.க.வின் 3 ஆண்டு கால ஆட்சியில் அது 7.3 சதவீதம் ஆக இருந்தது.  இந்த வருடம் அது 7.6 சதவீதம் ஆக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Next Story