ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: 78.9 சதவிகிதம் வாக்குப்பதிவு


ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: 78.9 சதவிகிதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Dec 2018 7:15 PM IST (Updated: 1 Dec 2018 7:15 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் 78.9 சதவிகிதம் வாக்குப் பதிவானது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார். இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 6 வது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 76.9% வாக்குப்பதிவாகியுள்ளது. ஜம்மு பகுதியில் 84.6 சதவிகிதமும் காஷ்மீர் பகுதியில் 17.3 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Next Story