திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலை கலைக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு
திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலை கலைக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி,
திருப்பதியை அடுத்த ரங்கம்பேட்டை அருகே உள்ள மாமிடிமானுகட்டா வனப்பகுதியில் பீமவரம் என்ற இடத்தில் நேற்று அதிகாலை செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை, போலீசார் சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கற்களை எடுத்து போலீசார் மீது வீசி தாக்கினர். இதனால் அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து செம்மரக்கடத்தல் கும்பல் வனப்பகுதியில் தப்பி ஓடியது. போலீசார் விரட்டிச்சென்று 3 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி காட்டுக்குள் மறைந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட சென்னை கே.கே.நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 30), வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (32), சித்தூரை சேர்ந்த ரூபேஸ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங்கள், நம்பர் பிளேட் மாற்றப்பட்ட ஒரு மினி லாரி மற்றும் மோட்டார்சைக்கிள், சமையல் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

Related Tags :
Next Story