நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.97 ஆயிரம் கோடி - அக்டோபர் மாதத்தை விட குறைவு


நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.97 ஆயிரம் கோடி - அக்டோபர் மாதத்தை விட குறைவு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 2 Dec 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.97 ஆயிரம் கோடி என்றும், அக்டோபர் மாதத்தை விட இது குறைவு என்றும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முடிவடைந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. மொத்த வருவாய் ரூ.97 ஆயிரத்து 637 கோடி கிடைத்து உள்ளது. ஆனால் கடந்த மாதமான அக்டோபர் மாதத்தில் கிடைத்த வருவாயை விட இதுகுறைவு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் ஜி.எஸ்.டி. மொத்த வருமானம் ரூ. ஒரு லட்சத்து 710 கோடி கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.94 ஆயிரத்து 442 கோடியும் ஆகஸ்டு மாதம் ரூ.93 ஆயிரத்து 960 கோடி வருவாயும் கிடைத்தது.கடந்த அக்டோபர் முதல் நவம்பர் முடிய 69 லட்சத்து 6 ஆயிரம் பேர் ஜி.எஸ்.டி. வருவாய் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி மூலம் கடந்த மாதம் மத்திய அரசுக்கு ரூ.35 ஆயிரத்து 73 கோடியும், மாநில அரசுக்கு ரூ.38 ஆயிரத்து 774 வருவாய் கிடைத்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story