குடியரசு தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் யார்? - மோடி தகவல்
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் குறித்து பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய குடியரசு தின விழா மற்றும் காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்கிறார். அர்ஜென்டினாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்க அதிபரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘தென்ஆப்பிரிக்க அதிபரை சந்தித்தது மகிழ்ச்சி. குடியரசு தின விழா மற்றும் காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் அவரை வரவேற்கிறோம். அவரது வருகையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :
Next Story