இந்தியாவின் ஜிசாட்–11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது


இந்தியாவின் ஜிசாட்–11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
x
தினத்தந்தி 3 Dec 2018 9:42 PM IST (Updated: 3 Dec 2018 9:42 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் ஜிசாட்–11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை, 

இந்தியாவில் அதிவேக இணையதள சேவைக்காக இஸ்ரோ 5,854 கிலோ எடையில் ‘ஜிசாட்–11’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இதில் 40 அதிநவீன டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதனை கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. ஆனால் மார்ச் மாதம் செலுத்தப்பட்ட ஜிசாட்–6ஏ செயற்கைகோள் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் விலகியது. 

எனவே ‘ஜிசாட்–11’ செயற்கைகோள் ஏவுவதை நிறுத்திவைத்து அதன் திறனை விஞ்ஞானிகள் அதிகரித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன்–5’ என்ற ராக்கெட் மூலம் 5-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் ‘ஜிசாட்–11’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Next Story