பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வருமான வரி தாக்கல் 50% அதிகரித்து உள்ளது; நிதியமைச்ச அதிகாரி தகவல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது என்று நிதியமைச்ச உயரதிகாரி இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் நடந்த இந்திய தொழிற்சாலைகளுக்கான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா கூறும்பொழுது, இந்த வருடம் இதுவரை 6.08 கோடி அளவிற்கு வருமான வரி தாக்கல்களை நாம் பெற்றுள்ளோம். இந்த 2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவு என கூறினார்.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நாட்டின் வரி செலுத்தும் கட்டமைப்பினை நல்ல முறையில் உயர செய்துள்ளது. கடந்த ஆண்டில் 7 லட்சம் என இருந்த கார்ப்பரேட் நிறுவன வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான 11.5 லட்சம் கோடி என்ற நேரடி வரி வருவாய் இலக்கை நாங்கள் அடைவோம் என்று அவர் கூறியுள்ளார்.
நமது மொத்த நேரடி வரி வளர்ச்சி விகிதம் 16.5 சதவீதம் ஆக உள்ளது. இதேபோன்று நிகர நேரடி வரி வளர்ச்சி விகிதம் 14.5 சதவீதம் அளவில் உள்ளது. வரி கட்டமைப்பினை ஆழ, அகலப்படுத்தும் வகையில் உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது உதவியது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
வருவாய் வரி தாக்கல் செய்யாத மற்றும் தாக்கல் செய்த விவரங்கள், வருவாயுடன் பொருந்திடாத நபர்களுக்கு இதுவரை 2 கோடி எஸ்.எம்.எஸ்.களை எங்களது துறை அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story