இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலம்: டிச.25-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி


இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலம்: டிச.25-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Dec 2018 6:01 AM GMT (Updated: 5 Dec 2018 6:01 AM GMT)

இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலமான போகிபீல் மேம்பாலம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

புதுடெல்லி,

அசாமின் திப்ரூகார் முதல் அருணாச்சல பிரேதசத்தின் பசிகாட் வரை போகிபீல் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி இந்த பாலத்தை பிரதமர் மோடி செயல்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது.

பொதுவாக திப்ரூகாரில் இருந்து அருணாசலப்பிரதேசம் வரை செல்ல 500 கி.மீ பயணிக்க வேண்டும். இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் சுமார் 100 கி.மீ தூரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 37 மணி நேரம் இருந்த ரயில்வே பயணம் 34 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேலே மூன்று வழி சாலையும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும்.

இந்த பாலம் கட்டும் பணிக்கு 1997 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவ கவுடா அடிக்கல் நாட்டினார். இருந்த போதிலும் 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே இப்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மேம்பால பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த 3 ஆம் தேதி முதல் முறையாக ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இந்த பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 


Next Story