பெண்ணால் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


பெண்ணால் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:15 AM IST (Updated: 1 Jan 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணால் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே டோம்பிவிலியை சேர்ந்தவர் துஷார்(வயது27). இவர் அதே பகுதியை சேர்ந்த 47 வயது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், அந்த வாலிபரை பழிவாங்க திட்டம் போட்டார். அவரை போனில் தொடர்பு கொண்டு டோம்பிவிலி பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் துஷார் பெண் அழைத்த இடத்துக்கு சென்றார். அங்கு கூட்டாளிகளான தேஜாஸ்(25), பிரதிக்(22) ஆகியோருடன் காத்திருந்த பெண், துஷாரை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் அவர், கூட்டாளிகளை துஷாரின் கை, கால்களை பிடிக்க சொல்லிவிட்டு அவரது மர்ம உறுப்பை வெட்டினார்.

இதைத்தொடர்ந்து துஷாருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த துஷார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் பெண் உள்பட 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story