ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை - பிரதமர் மோடி
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை என பிரதமர் மோடி கூறி உள்ளார் .#PMtoANI
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
* துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை, துல்லிய தாக்குதல் நடத்துவதை 2 முறை தள்ளி வைத்து இருந்தோம். ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துல்லிய தாக்குதலில் எந்த ராணுவ வீரரும் பலியாகக்கூடாது என உறுதியாக இருந்தேன்.
(கடந்த 2016-ம் ஆண்டு எல்லையை கடந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் அருகில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
* ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிவடைந்த பிறகே ராமர் கோவில் கட்டுவது குறித்து அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
* 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான தேர்தலாக இருக்கும்.
* ரிசரவ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை. உர்ஜித் படேல் சிறப்பாக பணியாற்றினார்.
உர்ஜித் பட்டேல் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ய போவதாக கேட்டு கொண்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக கடந்த 6-7 மாதங்களுக்கு என்னிடம் சொன்னார். அதையும் அவர் எழுதி கொடுத்தார் என கூறினார்.
Related Tags :
Next Story