விமான எரிபொருள் 14.7 சதவீதம் குறைவு, சாதாரண பெட்ரோல், டீசல் விலையை விட குறைந்தது


விமான எரிபொருள் 14.7 சதவீதம் குறைவு, சாதாரண பெட்ரோல், டீசல் விலையை விட குறைந்தது
x
தினத்தந்தி 1 Jan 2019 6:01 PM IST (Updated: 1 Jan 2019 6:01 PM IST)
t-max-icont-min-icon

விமான எரிபொருள் 14.7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சாதாரண வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் விலையை விட விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது.

புதுடெல்லி,

விமான எரிபொருள் விலை அதிரடியாக 14.7 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்போது வாகனங்களுக்கான பெட்ரோல்,  டீசல் விலையை விட விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளது. இந்த குறைக்கப்பட்ட விலையின்படி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.58,060.97 ஆக இருக்கிறது. அதாவது, ஒரு லிட்டராக கணக்கிட்டால், ரூ.58.06 ஆக இருக்கிறது. 

இந்த விலையானது, டெல்லியில் விற்கப்படும் பெட்ரோலின் விலையை விட ஏறத்தாழ 10 ரூபாய் குறைவாக உள்ளது. டெல்லியில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.65 ஆக உள்ளது. பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இல்லாமல் விற்கப்படும் மண்ணெண்ணய் ரூ.56.59 ஆக இருக்கிறது. விமான எரிபொருளின் விலை உள்ளூர் வரிகளின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என தெரிகிறது.

சர்வதேச சந்தையில் எண்ணைய் விலை நிலவரத்தின் படி, மாதம் முதல் தேதியில் விமான எரிபொருளின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மாதம் டிசம்பர் 1 ஆம் தேதி 10.9 சதவீதம் விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது மாதமாக விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Next Story