ஜி.எஸ்.டி. வசூல்: டிசம்பர் மாதத்தில் ரூ.94,726 கோடியாக குறைந்தது


ஜி.எஸ்.டி. வசூல்: டிசம்பர் மாதத்தில் ரூ.94,726 கோடியாக குறைந்தது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:46 PM IST (Updated: 1 Jan 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி. வசூல் ரூ.94,726 கோடியாக குறைந்தது.

புதுடெல்லி,

கடந்த நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.97,637 கோடியாக இருந்தது. டிசம்பர் 30-ந் தேதி வரை 72.44 லட்சம் ஜி.எஸ்.டி. கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.94,726 கோடியாக குறைந்தது.

இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.16,442 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.22,459 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.47,936 கோடி, கூடுதல் வரி ரூ.7,888 கோடி என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜி.எஸ்.டி. வசூல் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.03 லட்சம் கோடியாகவும், மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பர் மாதத்தில் 94,442 கோடியாகவும், அக்டோபர் மாதத்தில் ரூ1,00,710 கோடியாகவும், நவம்பர் மாதத்தில் ரூ. 97,637 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story