தலைமை செயலகம் முன் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை பாடுவேன் - சிவராஜ்சிங் சவுகான்
தலைமை செயலகம் முன் 109 எம்.எல்.ஏக்கள் வுடன் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை பாடுவேன் என்று சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக கமல்நாத் உள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம் என்ற பாடலை காட்டாயம் ஒலிக்க வேண்டும் என தலைமை செயலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த முறையை தற்போதைய முதல்-மந்திரி கமல்நாத் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து சிவராஜ்சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மரபை மாற்றியது துருதிருஷ்டவசமானது. மீண்டும் அந்த முறையை காங்கிரஸ் அரசு கொண்டு வரவேண்டும் அப்படி கொண்டு வரவில்லையெனில் வரும் 7-ம் தேதி தலைமை செயலகம் முன்பாக 109 எம்.எல்.ஏக்கள் வுடன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் என்றார்.
கமல்நாத் அரசு வந்தே மாதரம் பாடலை மீண்டும் ஒலிக்க செய்ய வேண்டும் என்று தலைமை செயலகம் முன்பாக பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story