காவிரி விவகாரம்; மாநிலங்களவையில் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி குடிநீருக்கும், மின்னுற்பத்திக்கும் பயன்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து, அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்றும் அதுபோல் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மாநிலங்களவையில் போராட்டம் நடத்தினர். துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு முன்பு அவர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
முன்னதாக அவையை சுமூகமாக நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வெங்கைய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என வெங்கைய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்து அமர்ந்த உடனே எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின.
Related Tags :
Next Story