பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகர் சுட்டுக்கொலை


பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகர்  சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2019 3:55 PM IST (Updated: 2 Jan 2019 5:05 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் தீப்நகரை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகரான பஸ்வானை முன் விரோதம் காரணமாக  நேற்று இரவு  துப்பாக்கியால்  ஒருவர் சுட்டுக்கொன்றார்.  கொலையாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் வீட்டை கண்டுபிடித்த கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர்.   

ராஷ்டிரிய ஜனதாதள பிரமுகரான பஸ்வானை சுட்டுக்கொன்றது 13 வயது சிறுவன் என தெரியவந்தது. இதனையறிந்த  கிராம மக்கள் சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தூக்கிலிட முயன்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக ராஷ்டிரிய ஜனதாதள பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story