11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்கு அளித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையும், இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்று கடந்த 17-ந் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியல் இடப்படவில்லை.
இந்த நிலையில் சக்கரபாணி தரப்பு வக்கீல் கபில்சிபல் நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் ஆஜராகி, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்குமாறு முறையீடு செய்தார். ஆனால், வேறோரு வழக்கை விசாரிக்க இருப்பதால் இந்த வழக்கை வருகிற 7-ந் தேதிக்கு விசாரிப்பதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story