இந்துக்களின் உணர்வுகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை: ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது


இந்துக்களின் உணர்வுகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை: ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது
x
தினத்தந்தி 1 Feb 2019 6:00 AM GMT (Updated: 1 Feb 2019 6:00 AM GMT)

சபரிமலை விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம்  பிரக்யாராஜ்ஜில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:- “ அய்யப்ப பக்தர்களும் இந்து சமூகத்தின் ஒரு அங்கத்தினர்தான். அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி ஒட்டு மொத்த இந்து சமுதாயத்திற்கும் ஏற்படும் நெருக்கடியாகும்.

உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள்  செல்லலாம் என கூறிய பின்னரும் எந்த பெண்களும் கோவிலுக்கு செல்ல விரும்பவில்லை. பிறகு ஏன் இலங்கையில் இருந்து பெண்ணை வரவழைத்து பின் வாசல் வழியாக கோவிலுக்குள் அழைத்து சென்றீர்கள்.

இந்து சமுதாயத்தினரை பிளவுபடுத்த மிகப்பெரும் சதி நடக்கிறது. ஆகையால் மத ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் பிரிந்து கிடக்கும்  இந்து சமூகத்தை ஒன்று சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை” இவ்வாறு அவர் கூறினார். 


Next Story