இடைக்கால பட்ஜெட்: ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-பியூஸ் கோயல்
இடைக்கால பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பியூஸ் கோயல் கூறினார். #InterimBudget2019 #Budget2019
புதுடெல்லி
பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து அவர் பேசினார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* பிஎப் சந்தாதாரர்களுக்கு உயிரிழந்தால் வழங்கப்படும் நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு.
* பசுக்களை பாதுகாக்க காமதேனு ஆயோக் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு.
* மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
* கால்நடை, மீன் வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை.
* பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் பிரசவ விடுப்பு.
* ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
* இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. கூடுதலாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
Related Tags :
Next Story