1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளார் #InterimBudget2019 #Budget2019
புதுடெல்லி
பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து பேசினார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
பட்ஜெட்டின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் .
* சூரிய மின் சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்வு
* உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து வடகிழக்கு மாநிலங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது
* வட கிழக்குப் பகுதிக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டில் 58,166 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 21% உயர்வு
* இறக்குமதி குறைவதால் ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிக்க ஒரு அவசர நடவடிக்கை தேவை.
* இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது. செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.
* கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் கோடி கண்டறியப்பட்டுள்ளது
* ஜிஎஸ்டி அறிமுகம், வரி வசூலிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தமாக அமைந்துள்ளது ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரியில் சில மாற்றம் கொண்டுவரப்படும்.
* ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும்.
* ஒரு மாதத்திற்கு ரூ. 97,000 கோடி வரி வசூலாகிறது.
* அத்தியாவசிய மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மிக மிக குறைந்த அளவு வரி
* வரிவருவாய் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு அதிகரிப்பு
* சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% விதிக்கப்பட்டுள்ளது
* அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த 8 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாங்கள் விரும்புகிறோம்.
* பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நேரடி வரி வசூல் 18% அதிகரித்துள்ளது.மேலும், 1 கோடி மக்களுக்கு மேல் முதல் முறையாக IT ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
* உலக செயற்கைக்கோள்களின் ஏவுதள மையமாக இந்தியா உள்ளது என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story