15 பேரின் 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கையில் விவசாயிகளுக்கும் மட்டும் 17 ரூபாயா? ராகுல் மீண்டும் தாக்கு


15 பேரின் 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கையில் விவசாயிகளுக்கும் மட்டும் 17 ரூபாயா? ராகுல் மீண்டும் தாக்கு
x
தினத்தந்தி 1 Feb 2019 6:49 PM IST (Updated: 1 Feb 2019 6:49 PM IST)
t-max-icont-min-icon

15 பேரின் 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கையில் விவசாயிகளுக்கும் மட்டும் 17 ரூபாயா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 கொடுக்கும் வகையில் திட்டம் கொண்டுவந்துள்ளது.  இத்திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்திட்டத்தை காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “உங்களால் 15 பேரின் ரூ. 3.5 லட்சம் கோடி  கடனை தள்ளுபடி செய்ய முடிகிறது, ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு ரூ. 17 அறிவிக்கிறீர்கள். இது அவமதிப்பு இல்லாமல் வேறு என்ன? விவசாயிகள் விவகாரம், வேலையின்மை, அரசு நிறுவனங்கள் மீதான தாக்குதல் ஆகியற்றை மனதில் கொண்டு தேர்தலில் போட்டியிருக்கும், ரபேல் விவகாரமும் இதில் அடங்கும்” என கூறியுள்ளார். 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங் பேசுகையில், “பிரதமர் மோடி உள்பட அனைத்து அமைச்சர்களும் பேசும்போது விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு என்ன செய்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் இளைஞர்களுக்கான வேலையில்லா விவகாரத்தில் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்? இளைஞர்கள்தான் எதிர்காலம். அவர்களைபற்றிய எண்ணம் அரசுக்கு இருக்க வேண்டும்” என கூறினார். 


Next Story