ராகுல் காந்தியை இந்து கடவுள் ராமராக சித்தரித்து பேனர், நீதிமன்றத்தில் வழக்கு
ராகுல் காந்தியை இந்து கடவுள் ராமராக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாட்னா,
2019 பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் தங்களுடைய கட்சியின் தலைவர்களை இந்து கடவுளாக சித்தரித்து பேனர்கள் வைக்கிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் இதுபோன்று அடிக்கடி போஸ்டர்களை பார்க்கலாம். பீகார் மாநிலம் பாட்னாவில் இதுபோன்று இந்து கடவுள் ராமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மதன் மோகன் ஜா மற்றும் பிற 4 பேர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story