மணிப்பூரில் ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து 100 பெண்கள் மீட்பு
மணிப்பூரில் ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து 100 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
மணிலா,
மணிப்பூர் மாநிலம் மோரே எல்லை வழியாக, பெண்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து எல்லைப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மோரே எல்லையில் உள்ள ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 பெண்கள் மீட்கப்பட்டனர். இம்பாலில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 60 பெண்கள் மீட்கப்பட்டனர். ஆட் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நேபாளத்தின் சுனௌலி நகரை சேர்ந்த ராஜீவ் ஷர்மா அனுப்பியிருக்கலாம் என டெங்குநோபுல் போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட 100 பெண்களும் உஜ்வாலா காப்பகத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்கள் கிடைத்தவுடன் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story