பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்


பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 3 Feb 2019 11:14 AM IST (Updated: 3 Feb 2019 11:14 AM IST)
t-max-icont-min-icon

ஜோக்பனி-ஆனந்த் விகார் செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜோக்பனி-ஆனந்த் விகார் செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 3.58 மணியளவில் சஹடாய் பஜர்க் பகுதியருகே திடீரென விபத்தில் சிக்கி தடம் புரண்டது.

இந்த விபத்தில் 11 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.  இவற்றில் 3 பெட்டிகள் கவிழ்ந்தது.  இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.  

இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பீகாரில் சீமாஞ்சல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story