சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு கொலை மிரட்டல்
சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மலப்புரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கேரளாவை சேர்ந்த கல்லூரி பேராசிரியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகருமான பிந்து (வயது 42), கனகதுர்கா (44) ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு பல இந்து அமைப்புகளும், அய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். மேலும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகின.
இந்த பரபரப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்ம நபர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், கோவிலுக்குள் நுழைந்ததற்காக இருவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story