"பத்ம பூஷன் விருதை திருப்பி கொடுக்க உள்ளேன்" -அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு


பத்ம பூஷன் விருதை திருப்பி கொடுக்க உள்ளேன் -அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 10:40 AM IST (Updated: 4 Feb 2019 10:40 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை திருப்பி ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா  அமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த வலியுறுத்தியும் அன்னா ஹசாரே காந்தி நினைவு தினமான கடந்த புதன்கிழமை தனது உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் தொடங்கினார். இன்று அவரது உண்ணாவிரத போராட்டம் 6-வது நாளாக நீடித்தது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை திருப்பி ஒப்படைக்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,

தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை ஜனாதிபதியிடம் திருப்பி ஒப்படைக்க உள்ளேன். அந்த விருதுக்காக நான் பணியாற்றவில்லை.  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனக்கு அந்த விருது தகுதியானது அல்ல என கூறியுள்ளார்.

Next Story